Home  |  திரை உலகம்

அமர காவியம் ( Amara Kaaviyam )

அமர காவியம் ( Amara Kaaviyam  )

Movie Name: Amara Kaaviyam அமர காவியம்
Hero: Sathya
Heroine: Mia George
Year: 2014
Movie Director: JEEVA SHANKAR
Movie Producer: The Show People
Music By: M. Ghibran


ஜீவாவும் கார்த்திகாவும் (மியா ஜார்ஜ்) ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். ஜீவாவின் நண்பன் கார்த்திகாவைக் காதலிக்கிறார். நண்பனின் காதலுக்குத் தூது போகிறான் ஜீவா. அங்கு அவனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. “நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று ஜீவாவைப் பார்த்துச் சொல்கிறார் கார்த்திகா. நண்பனை ஏமாற்றலாமா என்னும் குழப்பம் இருந்தாலும் கார்த்திகாவின் காதலை ஏற்கிறார் ஜீவா. காதல் பயணத்தில் ஏற்படும் திடீர் திருப்பத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். கட்டுப்பாட்டை மீறித் திமிறும் காதலால் விஷயம் மேலும் சிக்கலாகி இரு குடும்பங்களுக்கு இடையே பிரச்சினையில் போய் முடி கிற

து. ஜீவாவின் அதீதமான போக்கி னால் ஏற்படும் விபரீதங்கள் அவனைக் காவல் நிலையத்துக்கும் மனநல ஆலோ சகரிடமும் கொண்டுசெல்கின்றன. கார்த்திகாவின் குடும்பம் ஜீவாவுக்குத் தெரியாமல் ஊரைவிட்டுப் போகிறது. ஜீவா தன் காதலியை விடாமல் துரத்துகிறான். அதனால் ஏற்படும் விளைவுகள்தான் மீதிக் கதை. படத்தின் கடைசியில் வரும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்துக்காக இரண்டரை மணி நேரம் படத்தை இழுத்திருக்கிறார் இயக்குநர். படத்தில் காதலர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் எல்லாம் செயற்கையான இடைச்செருகல்களாகவே உள்ளன. ஜீவா உத்தரவாதம் கேட்கும்போது அதைக் கொடுப்பதில் கார்த்திகாவுக்கு என்ன பிரச்சினை என்று சரியாகச் சொல்லப்படவில்லை. கிளைமாக்ஸ் காட்சி நிஜ சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் கிளைமாக்ஸ் பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது.

மெதுவாக நகரும் படங்கள் கவித்துவமாகவோ, ஆழமான தன்மை கொண்டதாகவோ இருந்தால் பாராட்டலாம். அமர காவியம் கவித்துவமும் இல்லாமல் விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கிறது. கதை 1988-89களில் நடப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முந்தைய ரசனை, உடைகள் ஆகியவற்றைக் காணமுடியவில்லை. சத்யா நன்கு நடித்திருக்கிறார். மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பும் ஒருவன் என்னென்ன செய்வானோ, அதையெல்லாம் செய்யும் பாத்திரத்தை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கிறார். மியா அழகாக இருப்பதோடு நன்றாக நடிக்கவும் செய்கிறார். இப்போது வழக்கொழிந்துவரும் மூக்குத்தி எவ்வளவு அழகு என்பதை மூக்குத்தி அணிந்த அவர் முகம் உணர்த்துகிறது.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. ஓரிரு பாடல்கள் வசீகரிக்கின்றன. முதல் காட்சியில் வெண்மேகங்களின் பின்னணியில் வெள்ளை உடை அணிந்த பெண் கருங்கூந்தல் அலைபுரள மிதந்து செல்லும் காட்சி தரும் அழகியல் எதிர்பார்ப்பை ஒளிப்பதிவாளர் படம் முழுவதிலும் பூர்த்திசெய்கிறார். இதே காட்சி தரும் எதிர்பார்ப்பை கதை விஷயத்தில் பூர்த்திசெய்ய இயக்குநர் தவறுகிறார்.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?