Home  |  திரை உலகம்

ஆல் இன் ஆல் அழகுராஜா - திரைவிமர்சனம்

நடிகர் : கார்த்தி, சந்தானம், பிரபு

 

நடிகை : காஜல் அகர்வால், சரண்யா பொன் வண்ணன், ராதிகா ஆப்தே 

 

இயக்குனர் : எம்.ராஜேஷ், 

 

இசை : எஸ்.தமன், 

 

ஓளிப்பதிவு : பாலசுப்பிரமணியம்  

 

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கி இருக்கும் அடுத்த படம்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. இந்த படத்தில், கார்த்தி, கஜல் அகர்வால், சந்தானம், பிரபு, ராதிகா ஆப்தே, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

 

யாருமே பார்க்காத ஒரு மொக்க லோக்கல் சேனலை நடத்தி வருகிறார் அழகுராஜா(கார்த்தி). 

 

அந்த மொக்க சேனலையும், சன் டிவி, விஜய் டிவி போல உயர்த்த நினைக்கிறார் கார்த்தி, அவருடைய நண்பனாக வருகிறார் சந்தானம். இருவரும் இந்த சேனலை மக்கள் மத்தியில் எப்படியாவது பிரபலப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான வேளைகளில் களமிறங்குகின்றனர். இந்த நேரத்தில் பாடல் பாடுகிறேன் என்கிற பேரில், மேடையில் டார்ச்சர் கொடுக்கும் சித்ரா தேவிப் பிரியாவிடம்(காஜல் அகர்வால்) தன் மனதை பறிகொடுக்கிறார் அழகுராஜா. ஆனால் கஜல் அகர்வாலோ, கார்த்தியை வெறுத்து ஒதுக்குகிறார். ஒரு கட்டத்தில் கஜலும் ஓகே சொல்ல, கார்த்தியின் அப்பா பிரபு இந்த காதலை ஏற்க மறுக்கிறார். இறுதியில், கார்த்தியும், காஜலும் சேர்ந்தார்களா, பிரபு இவர்களின் காதலை எதிர்க்க காரணம் என்ன என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பதுதான் மீதி கதை.

 

கார்த்தி - ராஜேஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை என்பது தான் உண்மை.

 

இந்தப்படத்தில் அழகுராஜவாக வரும் கார்த்தி, பிரபுவின் இளமைகால நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார். பொதுவாக ராஜேஷ் படம் என்றால், அந்தப்படத்தில் சந்தானம் தான் ஹீரோவாக இருப்பார். அதே போல் இந்த படத்திலும் கார்த்திக்கு இணையாக வலம் வருகிறார் சந்தானம்.

 

சேனல் விளம்பரத்துக்காக, சந்தானத்துக்கு பெண்வேடமிட, கோட்டா சீனிவாஸ் சந்தானம் மீதே காதல் வயப்படுவதுதான்  முதல்பாதியில் ஒரே ஒரு காமெடி. உண்மையில் அவர்கள் இருவர் வரும் காட்சிகள் எல்லாமே சூப்பர் தான்.

 

 

ரப்பப்பா பாடல் காட்சியில் அப்படியே 1980 களை கண்முன் நிறுத்துகிறார் கார்த்தி.

 

சித்ரா தேவி பிரியாவாக வரும் கஜல், படத்தில்  சேலை கட்டிவரும் அழகே தனி. எஸ்.ஜே. பாஸ்கரிடம் இவர் பரத நாட்டியம் சீரியஸாக கற்றுக்கொள்ளும்போது தியேட்டரில் வெடிச்சிரிப்பு. படத்தில் உள்ள உருப்படியான 15 நிமிடங்களில் இவர் 10 நிமிடம் வருகிறார். 

 

தமனின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட் ஆகியுள்ளன.

 

ஹாட்ரிக் காமெடி ஹிட் கொடுத்த ராஜேஷ்தான் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். தனது முந்தைய படங்களைவிட இந்த படத்தில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். தொடர்ச்சியாக காட்சிகளை ரசிக்கமுடியாமல் ஆங்காங்கே கொஞ்சம் கடுப்பேத்தியிருக்கிறார்.  

 

மொத்தத்தில் ஆல் இன் ஆல் அழகுராஜா "ஏதோ கொஞ்சம் காமெடி இருக்கு"

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்