Home  |  திரை உலகம்

ஆல் இன் ஆல் அழகுராஜா ( All in All Azhagu Raja )

ஆல் இன் ஆல் அழகுராஜா ( All in All Azhagu Raja )

Movie Name: All in All Azhagu Raja ஆல் இன் ஆல் அழகுராஜா
Hero: KARTHI
Heroine: KAJAL AGGARWAL
Year: 2013
Movie Director: M.RAJESH
Movie Producer: STUDIO GREEN
Music By: S.THAMAN


லோக்கல் சேனல் ஒன்று நடத்திவரும் கார்த்தியின் லட்சியம், அந்த சேனலை நம்பர் 1 சேனலாக்கிவிட்டுத்தான் கல்யாணம் முடிப்பது என்ற உறுதியுடன் இருக்கிறார். ஆனாலும் படத்தில் ஹீரோயின் என்று ஒருவர் இருப்பதால், காதலில் விழுகிறார். சேனலை நம்பர் 1 ஆக்கலாம்னு அப்பா-அம்மா ஆசியோட முடிவு பண்றார். அப்போத்தான் அந்த பயங்கர உண்மை தெரியவருது. ஆமாங்க, ரெண்டு குடும்பத்துக்கும் ஃப்ளாஷ்பேக்லயே தகராறு. அப்புறம் என்ன, அதையும் தாண்டி காதல் ஜெயிச்சதான்னு அப்டிங்கறது ட்விஸ்ட்.

சேனலை நம்பர் 1 ஆக்கவும், ஹீரோயினை கரெக்ட் பண்ணவும் ஹீரோக்கு உதவ வழக்கம்போல் சந்தானம். ஆனா படம் முழுக்க ரெண்டுபேருமே வாங்க-போங்கன்னு பேசிக்கிறதால பழைய கெமிஸ்ட்ரி மிஸ்ஸிங். படம் ஆரம்பிச்சு அரைமணி நேரம் இவங்க ரெண்டுபேரு மட்டுமே ஸ்க்ரீன்ல இருக்காங்க.ஆனாலும் சிரிப்பு வரவே மடேனுங்குது. இடையில் சேனல் விளம்பரத்துக்காக, சந்தானத்துக்கு பெண்வேடமிட, கோட்டா சீனிவாஸ் ல்வ்ஸ் ஆவது தான் ஒரே ஒரு காமெடி. உண்மையில் அவர்கள் இருவர் வரும் காட்சிகள் எல்லாமே சூப்பர் தான். காஜல் அகர்வாலுக்கு தான் ஒரு நல்ல பாடகின்னு நினைப்பு இருக்கிறதும், கார்த்தி அதை உடைக்கிறதும் ஓகே. இரண்டாம்பாதியில் வரும் எஸ்.ஜே.பாஸ்கர்-காஜல் காமெடி சீன்கள் அட்டகாசம். ஃப்ளாஷ்பேக்கில் இளம்வயது பிரபுவாக கார்த்தியே நடித்திருப்பது நல்ல ஐடியா. கார்த்தியும் கலக்கியிருக்கிறார். 80களில் வந்த படம் மாதிரியே ஃப்ளாஷ்பேக்கை எடுத்திருக்கிறார்கள். குடும்பங்களுக்கிடையே சண்டைக்கான காரணமும் இருக்கிறது. ஃப்ளாஷ்பேக் முடிந்து மீண்டும் கார்த்தி சந்தானத்தின் உதவியுடன் எப்படியோ காதலில் ஜெயித்துத் தொலைக்கிறார்.


இந்த நல்ல நடிகருக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. அலெக்ஸ்பாண்டியன் படத்தில் எப்படி நடித்தார் என்று அதிர்ச்சியான நமக்கு, இளைய ‘இளைய திலகமாக’ அவர் வரும் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. முடிந்தவரை பிரபு போல் செய்திருக்கிறார். ரப்பப்பா பாடல் காட்சியில் அப்படியே 1980களை கண்முன் நிறுத்துகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது. இவரும் கார்த்தியும் பேசும் இடங்களில் சிரிப்பே வரவில்லை. படத்தில் ஒரே ஆறுதல், இந்த ஸ்வீட் தான். படத்தில் அவர் சேலை கட்டிவரும் அழகே தனி. எஸ்.ஜே. பாஸ்கரிடம் இவர் பரத நாட்டியம் சீரியஸாக கற்றுக்கொள்ளும்போது தியேட்டரில் வெடிச்சிரிப்பு.இளையராஜா ஸ்டைலில் போடப்பட்டிருக்கும் ரப்பப்பா.... என தமனின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர்.
வேண்டவே வேண்டாம்.... கையெழுத்து போடாதீங்க.......

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்