Home  |  திரை உலகம்

தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையுமான நாகேஸ்வரராவ் மரணம் !!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

 

தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவருக்கு வயது 90. இவர் 1924ம் ஆண்டு செப்டம்பர் 20ம்தேதி ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வெங்கடராகவபுரம் கிராமத்தில் பிறந்தார். மேடை நாடக நடிகராக இருந்து, 1944ம் ஆண்டு தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 1953 ஜூன் 26ம் தேதி வெளியான ‘தேவதாஸ்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக உயர்ந்தார். தேவதாஸ் படம் அவரது நடிப்பில் தமிழிலும் வெளியானது. பின்னர் தமிழில் சவுடாமணி, மாயமாலை, ஓர் இரவு, மாயக்காரி, பூங்கொடி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் தொடர் ஹிட் படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் ஆனார். தெலுங்கு நடிகர் என்.டி.ராமாராவுடன் சேர்ந்து ‘பல்லகூரிபில்லா‘ என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, 2 பேரும் சேர்ந்து சரித்திர மற்றும் புராணப் படங்களில் நடித்தனர். திரையுலகில் தொடர்ந்து 72 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தமிழில் எம்ஜிஆர், சிவாஜி போல் தெலுங்கில் என்டிஆர், நாகேஸ்வரராவ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தனர்.

 

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு நாகேஸ்வரராவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்த போது, அவருக்கு புற்றுநோய் பாதித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளிவில் நாகேஸ்வரராவ் உடல்நிலை மோசமானது. உடனே அவரை கேர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2.45 மணிக்கு மரணமடைந்தார். 

 

நாகேஸ்வரராவின் மனைவி அன்னபூர்ணா காலமாகிவிட்டார். இவர்களுக்கு மகன்கள் வெங்கட், நடிகரான நாகார்ஜுனா, மகள்கள் சத்தியவதி, நாகசுசீலா, சரோஜா ஆகியோர் உள்ளனர். கடைசியாக யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் மனம் தெலுங்கு படத்தில் மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யா ஆகியோருடன் நாகேஸ்வரராவ் நடித்தார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.  

 

நாகேஸ்வரராவின் உடல், மக்கள் அஞ்சலிக்காக ஐதராபாத்தில் உள்ள அவரது அன்னபூர்ணா ஸ்டூடியோவுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பட உலகை சேர்ந்த ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பொது மக்கள் மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது.  

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்