Home  |  திரை உலகம்

மீண்டும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கலாமா - அஜீத் ஆலோசனை !!

தமிழ் திரையுலகை பொறுத்த வரை ரசிகர் மன்றம் இல்லாத நடிகர்களை விரல் விட்டுதான் என்ன முடியும். 


ஏனெனில் பெரும்பாலான நடிகர்கள் தங்களது ரசிகர்களை எப்போதுமே சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. 


திரையரங்குகளில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருக்கிறார்.


ரசிகர் மன்றத்தில் அரசியல் நுழைகிறது என்று தெரிந்ததும் உடனடியாக மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். இருப்பினும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும்போது தாங்களது சொந்த பணத்திலேயே கட்அவுட்கள் வைத்து வருகிறார்கள். 


மாறாக அவரது படங்களும் முன்பை விட வசூலை வாரிக்குவித்து வருகிறது. இது அஜித்துக்கு பெரிய நெருடலை ஏற்படுத்தியுள்ளது. மன்றமே இல்லேன்னு சொல்லிட்டேன். அப்படியிருந்தும் என் மேல இவ்வளவு அன்பும், உயிரும் வைத்திருக்கும் அவர்களுக்காக மீண்டும் ரசிகர் மன்றத்தை நடத்தலாமா? என்று தனது சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் தல... 


அதனால் மீண்டும் ரசிகர் மன்றம் ஆரம்பித்தால், அதை எப்படி நடத்த வேண்டும், மன்றத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என கூடவே பல கண்டிஷன்களும் போடப் போகிறாராம்.  


எனவே விரைவிலேயே அஜித் ரசிகர் மன்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்