Home  |  திரை உலகம்

ஐந்து ஐந்து ஐந்து ( Ainthu Ainthu Ainthu )

ஐந்து ஐந்து ஐந்து ( Ainthu Ainthu Ainthu )

Movie Name: Ainthu Ainthu Ainthu ஐந்து ஐந்து ஐந்து
Hero: BHARATH
Heroine: Mrithika
Year: 2013
Movie Director: SASI
Movie Producer: Chennai Cinema Production
Music By: Simon


வில்லனிடம் இருந்து தன்னையும் தன் காதலியையும் காப்பாற்றிக்கொள்ள, ஹீரோ போராடும் ஆக்ஷன். பரத் - சந்தானம் இருவரும் அண்ணன்-தம்பிகள். ஒரு விபத்தில் சிக்கும் பரத், அந்த விபத்தில் தன் காதலி மிருத்திகா இறந்துவிட்டதாக நம்புகிறார். ஆனால்,'உனக்கு அப்படி ஒரு காதலியே இல்லை. விபத்தின் காரணமாக, இல்லாத ஒன்றை இருப்பதாக உன் மூளை கற்பனை செய்துகொள்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த மர்ம முடிச்சை பரத் அவிழ்க்கும்போது, ஒரு கும்பல் அவரைத் துரத்துகிறது. யார் அந்தக் கும்பல்,

பரத்துக்கு காதலி இருப்பது உண்மையா பொய்யா என்பது க்ளைமாக்ஸ்! மென்மை பாணியில் இருந்து விலகி வன்மையும் வன்முறையும் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லரைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சசி. யூகிக்க முடிந்த பல காட்சிகளுக்கு இடையில் சடாரென தலைகாட்டும் சில திருப்பங்கள். அமுல்பேபி காதலன், மொட்டத் தலை நோயாளி, '8 பேக்’ ஹீரோ என விதவித கெட்டப்பும், அதற்கு ஏற்ற தனித்தனி நடிப்புமாக மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்கிறார் பரத். அவசரத்தில் மிருத்திகாவின் செல்போனை எடுத்து வில்லன் மேல் எறியும் ஆவேசத்தில்... அசத்தல்!

அப்போதுதான் பள்ளி முடிந்துவந்த சின்னப் பெண் போல க்யூட் பியூட்டி மிருத்திகா. பரத்துக்கு ஸ்பெஷல் பவர் இருப்பதாக நம்புவது, காதலை மனசுக்குள்ளேயே வைத்து அவஸ்தைப்படுவது, 'அவன் வேற’ என வில்லனிடம் சீறுவது என நடிப்பிலும், அழகிலும் ரசிக்க வைக்கிறார். 'அவளை ஜெனிலியானு நினைச்சேன். ஆனா அஞ்சலிப் பாப்பாவா இருக்காளே’ என்று ஹீரோயினை வாரும் இடத்தில் சிரிக்கவைக்கும் சந்தானம், குணச்சித்திர நடிப்பிலும் நன்று. மர்மங்கள், ரகசியங்களில் கவனம் செலுத்திய இயக்குநர், ஒட்டுமொத்த திரைக்கதையின் வேகத்தை அதிகரித்திருக்கலாம்.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
சச்சின் பல கோடி கனவுகள்-திரைவிமர்சனம்!
தொண்டன் திரைவிமர்சனம்!
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?