Home  |  அறுசுவை

அகத்திப்பூ பச்சைக்கூட்டு(agathi leaves green gravy)

தேவையானவை:

 

அகத்திப்பூ - 10,

பாசிப்பருப்பு - 200 கிராம்,

சிறிய வெங்காயம் - 5,

தக்காளி - 1,

பச்சை - 3,

அரிசி - 2 டீஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்,

தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிது,

கொத்தமல்லி - சிறிது,

கடுகு - 1/2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 1 ஸ்பூன்,

நெய் - 1 டீஸ்பூன்,

 

செய்முறை:

 

1.பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

2.பாசிப்பருப்பு நன்கு வெந்தவுடன், நறுக்கிய அகத்திப்பூ, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

அரிசியை சிவக்க வறுக்கவும்.

3.வறுத்த அரிசி, சீரகம், தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

4.வெந்த அகத்திப்பூவுடன் அரைத்தவைகளை சேர்த்து கொதிக்க விடவும்.

5.கடாயில் எண்ணெய், நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து கூட்டில் கொட்டி இறக்கவும்.

  16 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!