Home  |  ஆரோக்கியம்

அகத்திக் கீரை மருத்துவ பண்புகள் !

அகத்திக் கீரை மருத்துவ பண்புகள் !

இயற்கை தரும் கொடை தான் கீரைகள் இது மனிதனுக்கு கிடைத்த  சிறந்த மருத்துவ உணவு. உணவே மருந்து எனும் நமது இந்திய மருத்துவம் அனைவருக்கும் முன்னோடி. அந்த வகையில் அகத்தி கீரை தரும் நன்மைகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது.

அனைத்து வகையான சத்துகளையும் கொண்டது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் நீக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்கு உண்டு.ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.

 

 

1.பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும்.

 

2.அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும்.

 

3.அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு, அதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி நீங்கும்.

 

4.இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டி வந்தால் புண் ஆறும்.

 

5.அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட வயிற்றுவலி குறையும்.

 

6.அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

 

7.பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால்,தலைவலி நீங்கும்.

 

8.அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், சளி நீங்கும்.

 

9.அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் நீங்கும்.

 

10.இக்கீரை பித்த நோயை நீக்கும்,உடல் சூட்டைத் தணிக்கும்.

 

 

  23 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!