Home  |  திரை உலகம்

அடுத்த கட்டம் (Adutha Kattam )

அடுத்த கட்டம் (Adutha Kattam )

Movie Name: Adutha Kattam அடுத்த கட்டம்
Hero: Ganthiban
Heroine: Malar Meni Perumal
Year: 2013
Movie Director: Murali Krishnan
Movie Producer: Haven Pictures


படத்தின் ஆரம்பத்தில் இது என்ன அமானுஷய படமா, சைக்கோ படமா அல்லது பெண்களுக்கு எதிராக நடைபெறும் அவலங்களை சொல்லும் படமா என்று ரசிகர்களை யோசிக்க வைக்கும் திரைக்கதை, காட்சி காட்சி அடுத்து என்ன நடக்கும் என்ற ரீதியில் விறுவிறுப்பாக நகர்கிறது. எப்போதும் வேலை வேலை என்று இருக்கும் கணவர், தங்களது திருமண நாளில் கூட நேரத்திற்கு வீட்டுக்கு வராமல் அலுவலக பணியில் மூழ்கிப்போனதால், கோபமடையும் மனைவி, தனது அம்மா வீட்டுக்கு தனியாக, இரவு நேரத்தில் காரில் பயணப்படுகிறார். அப்போது கார் ஒரு இடத்தில் பழுதடைந்து நின்றுவிடுகிறது. அதன் பிறகு நடைபெறும் சில சம்பவங்களால், பிரச்சனைகளுக்கு ஆளாகும் நாயகி இறுதியில் அதில் இருந்து மீண்டாரா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ். இதற்கிடையில் மனைவியை தேடிச் சேலும் கணவரும் ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ள இறுதியில் இவர்களது நிலை என்ன ஆனது? என்பதை திகிலாக சொல்லியிருக்கிறார்கள். சாதாரண திகில் கதை தான் என்றாலும், அதை எந்தவிதத்தில் சொன்னால், ரசிகர்களை வெகுவாக சென்றடையும் என்பதில் மிகவும் தெளிவாக புரிந்துகொண்டு திரைக்கதையையும், காட்சிகளையும் ரொம்பவே சிறப்பாக அமைத்திருக்கிறார். மலர் மேனியின் கணவராக நடித்துள்ள அகோந்திரன் சகாதேவன், வில்லன் காந்திபன், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சசிதரன் ராஜூ, கடத்தல் காரர்களாக நடித்துள்ள சீனி, அகஸ்டின் லீயோ உள்ளிட்ட அனைவரும் கதாபாத்திரத்திற்கு எது தேவையோ அதை நன்றாகவே புரிந்துகொண்டு நடித்துள்ளார்கள்.

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்