Home  |  நாட்டு நடப்பு

அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா தோல்விக்கான காரணங்கள் !!

அடிலெய்ட் டெஸ்டில் இந்தியா தோல்விக்கான காரணங்கள் !!

அடிலெய்டில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தற்கான காரணத்தைப் பற்றி இங்கு காண்போம்,

மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 5 விக்கெட் இழற்பிற்கு 369 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருந்தது. ரோஹித் சர்மா 33 ரன்களுடனும், சஹா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 4-வது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா மேலும் 10 ரன் எடுத்து அவுட் ஆனார்.

லயன் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை முன்னால் வந்து சார்ட் மிட்ஆப் (Short Mid Off) திசையில் அடித்தார் ரோஹித். ஆனால், பந்து பவுலரிடம் கேட்ச் ஆக மாறியது. சமீபத்தில் ஒருநாள் போட்டியில் 250 ரன்னுக்கு மேல் அடித்த ரோஹித் சர்மா இதுமாதிரியான ஷாட் அடித்ததுதான் முதல் தவறு.

அவர் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து நின்று ஆடியிருந்தால் இந்தியா 500 ரன்னை தாண்டியிருக்கும். அப்படி நடந்திருந்தால் இந்த போட்டி டிராவில் முடிந்திருக்கும்.

இரண்டாவது இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்யும்போது தவான் 9 ரன்னில் ஜான்சன் பந்தில் அவுட் ஆனார். லெக் சைடு பிட்ச் ஆகிய பவுன்சர் பந்து ஸ்விங் ஆகி தவான் உடலை நோக்கி வந்தது. தவான் குனிந்து அந்த பந்தை தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர் அடிப்பதற்காக திரும்பினார். ஆனால், பந்து அவரது மார்பை உரசி விக்கெட் கீப்பர் ஹாடின் கைக்குள் புகுந்தது. ஆனால், அரைகுறை மனதுடன் ஹாடின் அப்பீல் செய்தார். அதற்குள் நடுவர் விக்கெட் கொடுத்து விட்டார்.

ரீப்ளேயில் பந்து பேட்டில் படாதது துல்லியமாக தெரிந்தது. நடுவரின் இந்த தவறும் இந்தியா தோற்பதற்கு ஒரு காரணம்.

புஜாரா 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். லயன் ஆப்சைடுக்கு வெளியே வீசிய பந்தை முன்னால் வந்து ஸ்ட்ரோக் வைக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் உரசி கீப்பரிடம் சென்றது. பந்தை வருவதை அறிந்த புஜாரா முன்காலை ஏற்கனவே ஆப்சைடுக்கு வெளியே வைத்தார். ஆனால், பேட்டை அவர் முன்னால் கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம்.

விஜய் பொறுமையாக விளையாடி 99 ரன்கள் எடுத்தார். 95 ரன்னில் இருந்து அவர் பவுண்டரி மூலம் 99 ரன்னைத் தொட்டார். ஆனால் அதன்பின் ஒரு ரன் எடுக்க விஜய் அதிக அளவில் திணறினார். ஒருவித பதற்றத்துடன் விளையாடினார். இதனாலேயே 233 பந்துகள் சந்தித்த அவர் 234 பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்திய வீரர்களுக்கு 99 ரன்னில் இருக்கும்போது மனநிலையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்று இன்னும் பயிற்சி கொடுக்க வேண்டும்.

ரகானே டக் அவுட். அம்பயர் செய்த அடுத்த தவறு. இந்த தவறுதான் இந்தியா தோல்வி அடைய 50 சதவீத காரணமாகும். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை முன்னால் சென்று (Front Foot) ஸ்ட்ரோக் வைத்தார். ஆனால் பந்து பேடில் உரசி சிலி மிட்ஆன் (Sily Mid On)ல் இருந்த வீரர் கேட்ச் பிடித்தார். பந்து பேட்டில் படவில்லை. ஆனால், நடுவர் அவுட் கொடுத்து விட்டார்.

அடுத்து ரோகித் சர்மா முதல் போட்டியில் எவ்வாறு தவறு செய்தாரோ அதேபோல் இந்த இன்னிங்சிலும் ஆப்சைடுக்கு வெளியே வந்த பந்தை முன்னால் சென்று தடுத்து விளையாடினார். ஆனால் பந்து கையுறையில் பட்டு லெக் சைடு ஸ்லிப் திசையில் கேட்ச் ஆனது. அவர் அந்த பந்தை பின்னால் சென்று (Back Foot) விளையாடி இருக்கலாம்.

ரோகித் சர்மா அவுட் ஆகும்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற நிலையில்தான் இருந்தது. இந்தியா வெற்றிக்கு 86 ரன்கள் தேவைப்பட்டது. கோலியுடன் சஹா களத்தில் இருந்தார்.

இந்த இருவரும் களத்தில் நிற்கும்போது 80-வது ஓவரை லயன் வீச வந்தார். இந்த ஓவருக்குப் பின் புதிய பந்தை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்திருந்தது. ஆனால், சஹா 80-வது ஓவரின் கடைசி பந்தில் போல்டானார். இதனால், ஆஸ்திரேலியா புதிய பந்தை எடுக்கும் முயற்சியை கைவிட்டது.

82-வது ஓவரை லயன் வீசினார். அந்த ஓவரின் 4 பந்தில் கோலி அவுட் ஆனார். ஷாட் பிட்ச் ஆக வந்த பந்தை லாங் மிட்விக்கெட் நோக்கி தூக்கி அடித்தார். ஆனால், கேட்ச் ஆக மாறியது. பொறுப்பான நிலையில் விளையாடிய கோலி அந்த பந்தை தூக்கி அடித்திருக்கக்கூடாது. கடைசி வரை அவர் நிலைத்து நின்று போராடியிருக்க வேண்டும்.

முக்கியமானது டாஸ். அடிலெய்ட் ஆடுகளத்தில் புற்கள் இல்லை. பந்து ஸ்விங்கும் ஆகவில்லை. இதனால் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதல் இரண்டு நாட்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் தேர்வு செய்து இந்தியா முதல் இன்னிங்சில் 500 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால், அந்த வாய்ப்பு போனது.

ஆடுகளம் 4 மற்றும் 5-வது நாட்களில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. லயன் ஆப் ஸ்பின் பந்து வீச்சு என்பதால் அவரை எதிர்கொள்ள பின்னால் வந்து (Back Foot) விளையாடுவது முக்கியத்துவம் வாயந்ததாகும். இதை இந்திய வீரர்கள் சரியாகச் செய்யாததால்தான் இந்தியா தோற்றது.

பொதுவாக இந்தியா சுழற்பந்தை எளிதாக எதிர்கொண்டு விளையாடக்கூடியவர்கள். சச்சின், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் ஆப் ஸ்பின்னை பின்னால் வந்து (Back Foot) விளையாடுவதில் சிறந்தவர்கள். அதனால் ஆப் ஸ்பின்னர் பந்து இவர்களிடம் எடுபடாது.

ஆனால் தற்போது இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களில் கோலியைத் தவிர மற்ற வீரர்கள் யாருக்கும் பின்னால் வந்து (Back Foot) விளையாட தெரியவில்லை. இதனால்தான் இந்த போட்டியில் நாம் தோற்றோம். இந்த தவறை இளம்வீரர்கள் திருத்திக்கொள்ளாவிட்டால் இந்தியா நான்கு டெஸ்டிலும் தோற்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனெனில், டெஸ்ட் போட்டியில் ஒருவர் சதம் அடித்தால் மட்டும் போதாது. குறைந்தது 4 வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.

  23 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?