Home  |  திரை உலகம்

எதிர்கால சூழலில் என் மகளை நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது : நடிகர் சூர்யா !!

வரும்கால சூழலில் என் மகளை நினைத்துப் பார்த்தால் பயமாக இருப்பதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார். 

 

ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ பிரியா இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் தான் மாலினி 22 பாளையங்கோட்டை.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று மாலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் கல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, இயக்குனர், பாலச்சந்தர் உட்பட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட சூர்யா பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, 

 

ஒரு சிறந்த படம் என்பது இரண்டரை மணி நேர பொழுதுபோக்காக இல்லாமல், படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு போனபிறகும் படம் பார்த்த தாக்கம் இருக்கவேண்டும். ஒரு கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் படங்கள் எத்தனை என்பதை கடைசி 3 வருடங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்ற துறையில் இருப்பவர்களிடம் பேசும்போது நல்ல கருத்துள்ள படங்கள் என்றால் 2-3 படங்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இதில் நானும் அடக்கம் என்பதை மறுக்கவில்லை. 

 

இன்றைய தலைமுறையின் மீது பெரிய பழியே இருக்கிறது. என் மகளின் தலைமுறை வெளிவரும்போது சமூகம் எப்படி இருக்கும் என்று ஒரு பயம் என் கண்முன்னே தெரிகிறது. இன்று ஒரு அமெரிக்க நாளிதழில் அசாம் மாநிலத்தில் ரேப்' ஃபெஸ்டிவல் நடப்பதாக எழுதியிருக்கிறார்கள். அதை உண்மை என நம்பி ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் யாரும் இந்தியாவிற்கு போகாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள். நாட்டில் நடப்பதை சினிமாவாக எடுக்கிறோம். சினிமாவில் எடுப்பதுதான் நாட்டில் நடக்கிறது. நம்மிடம் மிகவும் பலமான காட்சி ஊடகம் இருக்கிறது. இதை வைத்து நாம் செய்ய நினைப்பதை செய்யலாம். எல்ல துறைகளிலும் பெண்கள் அதிக அளவில் வரவேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதற்கு இந்த படம் ஒரு சிறு முயற்சியாக இருக்கும் என தான் நம்புவதாக நடிகர் சூர்யா பேசினார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்