Home  |  திரை உலகம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு அனிமேஷன் படத்தில் சூர்யா, அனுஷ்கா, சுருதி ஹசன் மற்றும் சித்தார்த் !!

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு அனிமேஷன் படத்தில் முன்னணி திரை நட்சத்திரங்களான சூர்யா, அனுஷ்கா, சுருதி ஹசன் மற்றும் சித்தார்த் நடித்துள்ளனர்.

 

டீச் எயிட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்ஐவி, எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தடுப்பு முறைகள் குறித்தும் உலக மக்களிடையே பல ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்திய அளவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழக இருக்கிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். உலக எயிட்ஸ் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் முதல் தேதியில் உலகம் முழுவதும் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.   

 

இந்நிலையில், டீச் எயிட்ஸ் அமைப்பு தமிழ் அனிமேஷன் என்ற பெயரில் உருவாக்கியுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தமிழ் அனிமேஷன் படத்தின் காட்சிகளில் எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த அனிமேஷன் காட்சிகளில் நடிகர்கள் சூர்யா, சித்தார்த், நடிகைகள் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த தமிழ் அனிமேஷன் விழிப்புணர்வு படம் டிசம்பர்  முதல் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் இதை பொது மக்களிடம் குருந்தகடுகள் மூலமாகவும் சேர்க்க டீச் எயிட்ஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. 

 

இந்த அனிமேஷன் படத்தில் இடம்பெற்றது குறித்து நடிகை அனுஷ்கா கூறுகையில், ‘எயிட்ஸ் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு இதுபோன்ற பரவலான கல்வி திட்டங்கள், குறும்படங்கள் மூலம்தான் மக்களிடையே எடுத்து செல்ல முடியும். அதிலும் டீச் எயிட்ஸ் அமைப்பு உருவாக்கியுள்ள தமிழ் அனிமேஷன் படத்தில் உள்ள காட்சிகள் 2 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை சுலபத்தில் புரிந்து கொள்ளும் விதமாக உள்ளது. இளம் வயதினரை கவரும் விதமாக அறிவியலும், பொழுதுபோக்கும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

 

நடிகர் சித்தார்த் கூறும்போது, ‘டீச் எயிட்ஸ் உருவாக்கியுள்ள இந்த அனிமேஷன் காட்சியில் நானும் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் நடிப்பு வாழ்க்கையில் இந்த விழிப்புணர்வு அனிமேஷன் காட்சிகளில் நானும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியே. இதை பார்க்கிறவர்களுக்கு ஏராளமான கேள்விகள் தோன்றும். பார்த்து முடிந்ததும் அந்த கேள்விகளுக்கு பதிலும் கிடைத்துவிடும்," என்றார்.

 

அனிமேஷன் படம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறும்போது, "மிக முக்கியமான விழிப்புணர்வு அனிமேஷன் காட்சிகளில் நானும் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது," என்றார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்