Home  |  திரை உலகம்

நடிகர் சிவா - பேட்மிட்டன் வீராங்கனையுடன் காதல் திருமணம்

சிவா சென்னை-600028 படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், அதை தொடர்ந்து, சரோஜா, தமிழ் படம், கலகலப்பு படத்தில் கதாநாயகனாகவும் மற்றும் மிக முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார்.சிவாவுக்கும், பேட்மிட்டன் வீராங்கனை ப்ரியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. மேலும் இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தார்கள். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். அதன்படி, சிவா-ப்ரியா திருமணம் வருகிற நவம்பர் 15-ந் தேதி, சென்னையில் நடக்கிறது. மணமகள் ப்ரியா, சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சிவா தற்போது தில்லுமுல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தில்லுமுல்லு படத்தில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில், சிவா நடிக்கிறார். பழைய தில்லுமுல்லு படத்தில் நடித்தபோதுதான் ரஜினிகாந்த்-லதா காதல் திருமணம் நடந்தது. தற்போது சிவா-ப்ரியா திருமணமும் காதல் திருமணம்தான்.

திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகர் சிவா கூறியதாவது:-   

நானும், ப்ரியாவும் 5 வருடங்களாக காதலித்து வந்தோம். தற்போது  எங்கள் காதல் கல்யாணத்தில் முடிந்தது சந்தோசமாக இருக்கிறது. திருமணம் எனது தனிப்பட்ட விஷயம் என்பதால் எங்கள் திருமணத்தில் முக்கிய உறவினர்கள்-நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். அதனால்தான் திருமணம் எங்கே நடக்கும்? என்பதை வெளியில் சொல்ல விரும்பவில்லை என சிவா கூறினார்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்