Home  |  நாட்டு நடப்பு

அப்துல் காலம் எதிர் காலத்தின் முன்னோடி !!

அப்துல் காலம் எதிர் காலத்தின் முன்னோடி !!

நமது தென்னகத்தின் கடைகோடியான ராமேஸ்வரத்தில் 1931 ம் வருடம் அக்டோபர் மாதம் 15ம் தேதி பிறந்தவர் நம் இந்திய நாட்டின் மூத்த குடிமகன் அவுல் பக்கிர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் அவர்கள், இவரின் தனித்தன்மைக்காக நமது இந்திய அரசு பாரத் ரத்னா, பத்ம பூஷன் போன்ற விருதுகளை அளித்து அவரை கௌரவ படுத்தியுள்ளது.

இந்திய அணு சக்தி துறையில் இணைந்து பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியதன் மூலம் நம் அனைவருக்கும் இவரின் பங்களிப்பு தெரிய வந்ததது. திரு அப்துல் கலாம் 'அக்னி, பிரித்வி' என பல ஏவுகணைகளின் தயாரிப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

மாணவர்களிடையே 'கனவு காணுங்கள் அது ஒன்று தான் உங்கள் உயர்வுக்கு வழி காட்டும் எனும்
தன்னம்பிக்கை விதையை அவர்களிடம் ஆழமாக விதைத்த பெருமைக்குரியவர் அப்துல் கலாம், எங்கு விழாவுக்கு சென்றாலும் அங்கெல்லாம் மாணவர்களை வரவழைத்து கருத்தரங்கம் வைத்து நம் இளையோரை வழி நடத்தி நம் நாட்டிற்கு நாம் செய்ய வேண்டியவைகளை சொல்லி நம் நாட்டுக்காக வாழ்ந்த உத்தம புத்திரன் இவரே.

மாணவர்களை நல வழியில் செதுக்க பல புத்தகங்களை எழுதியுள்ள மகா சிறப்பு மிக்கவர். இதுவரை 13 பேர் இந்திய ஜனாதிபதி நாற்காலியை அலங்கரித்திருந்தாலும் 'மக்கள் ஜனாதிபதி' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், 84 வயதிலும், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்தியா 2020 க்குள் வல்லரசாக வேண்டும் என கூறி வந்த இவர் வாழ்நாளின் கடைசி வரை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்த லட்சிய புருஷன் ஆவார்.

  28 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பெரும் விபத்தில் இருந்து அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார் சுரேஷ் ரெய்னா
அனிதாவின் தற்கொலையின் பின்னணியில் முக்கிய தமிழ் பெண் பிரபலம்!! வெளியானது இரகசியம்..
மனசெல்லாம் வலிக்குது இந்த வீடியோவைப் பார்க்கும்போது !
தற்கொலையல்ல கொலை: ‘என் கையில் ஒரு பந்து இருக்கிறது, அதை வைத்தே ஆட்சியை கலைப்பேன்’ என்று சொன்ன ஸ்டாலின்
ஓ.பி.எஸ்.சை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி போட்டி?அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்!
பாலியல் பலாத்கார வழக்கில் தண்டிக்கப்பட்ட சாமியாருடன் கோலி என்ன செய்கிறார் தெரியுமா! வைரலாகும் வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு
பேரறிவாளனுக்கு திருமணம்
இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்?
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?