Home  |  திரை உலகம்

தமிழகத்திலும், அமெரிக்காவிலும் அதிக தியேட்டர்களில் ரிலீசாகிறது ஆரம்பம் !!!

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 31ந் தேதி, ஆரம்பமும், நவம்பர் முதல் தேதியில் பாண்டியநாடும், நவம்பர் 2ந் தேதி தீபாவளி அன்று ஆல் இன் ஆல் அழகுராஜாவும் ரிலீசாகிறது.

 

இந்த மூன்று படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால், தியேட்டர்களை பிடிப்பதில், தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், அஜித் நடித்து வெளிவர இருக்கும் ஆரம்பம் திரைப்படம், அதிக தியேட்டர்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

 

தமிழகத்தை பொறுத்தவரை, சுமார் 850 திரையரங்கங்கள் மட்டுமே, புதிய படங்களை வெளியிடுவதற்கு ஏற்ற சொகுசான திரையரங்கங்கள். இவற்றி சுமார் ஐந்நூறு திரையரங்குகளில், ஆரம்பம் ரிலீசாகிறது. ஆல்இன் ஆல் அழகுரஜா 300 தியேட்டர்களிலும், பாண்டிய நாடு சுமார் 200 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது. 

 

அமெரிக்காவிலும் அதிக திரையரங்கங்களில் வெளியாகிறது : 

 

பொதுவாக அமெரிக்காவில், தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20-30 ஆகத்தான் இருக்கும். அதுவும் பெரிய நட்சத்திரங்களின் படங்களாக இருந்தால்தான் எண்ணிக்கை இப்படி இருக்கும். 

 

சமீப காலமாக தமிழ் திரைபடங்களை வெளியிடும் திரையரங்கங்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

 

தற்போது ரிலீஸாகவிருக்கும் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்