Home  |  ஆன்மிகம்

மனமே அலைபாயுதே

மனமே அலைபாயுதே

தராசு முள் நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந் தால், நேராக நிற்காமல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தராசு முள் ஆடிக் கொண்டிருக்கும்.

அதுபோல, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித் தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.

ஒரு தட்டில் ஆசைகள் அனைத் தையும் வைத்து, மற்றொரு தட் டில் பக்தியை வைத்துப் பார்த் தால், பக்தியே பளுவானது; வலுவானது. மற்ற விஷயங் களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால் அவனையே பிடித்து விடலாம்.

சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறான். நமக்கு இப்போது கிடைத் துள்ள மனிதப் பிறவி புதிதாக முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத் தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. ஆத்மா அழிவற்றது. அது, மேலும், கீழும் போய்ப் போய் வருகிறது. கர்ம வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த வாழ்வு கிடைக்கிறது.


புண்ணிய காரியம் என்றால், தான – தர்மங்கள் செய்வது மட்டுமல்ல; தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம் பெரிய புண்ணியம். நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன், ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர் களை தரிசித்திருக்கலாம். எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர்.

உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம்பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்கிற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும். இப்போது அதன் எல்லைக் கோடு வரையிலாவது போக முடியுமா என்பதுதான் கேள்வி.

மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத் திலோ பகவானோடு சேர்ந்து விடலாம். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும். அடிமுடி காணாத தெய்வத்தின் மேல் நம்பிக்கை கொள்....மனமே

  10 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!