Home  |  திரை உலகம்

பொங்கல் ரேஸில் மூன்று படங்கள் - யார் யாருக்கு எவ்வளவு தியேட்டர் !!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை மிகப் பெரிய வசூலைப் பெற்றுத் தரும் சீஸன் என்றால் அது பொங்கல் தான். கிட்டத்தட்ட அனைவருக்கும் ஒரு வாரம் சேர்ந்தாற்போல் விடுமுறை வருவது இந்த ஒரு சீஸனில்தான். அதனால் தான் பெரிய நடிகர்களின் படங்கள் இந்த சீஸனைக் குறிவைப்பது வாடிக்கை.  


இந்தப் பொங்கலுக்கு 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அவை ஷங்கரின் ஐ, அஜீத் நடித்த என்னை அறிந்தால், விஷால் நடித்துள்ள ஆம்பள ஆகியவைதான் அந்த மூன்று படங்கள். 


ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழகத்தில் சுமார் 450 அரங்குகள் வரை ஐ படத்திற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


ஐக்கு சற்றும் சளைக்காத முக்கியத்துவம் கொண்ட படம் என்னை அறிந்தால். காரணம் அது அஜீத்தின் படம். இந்தப் படத்துக்கும் அதிக அரங்குகளை எதிர்ப்பார்க்கிறார்கள். ஆனால் ஐ நெருக்கடி காரணமாக 300 அரங்குகள் வரைதான் என்னை அறிந்தால் படத்திற்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம். 


சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள படத்துக்கு டார்கெட்டும் இதே 300 அரங்குகள் தான். 


எப்படியாவது அதிக தியேட்டர்களை பிடித்துவிடும் முயற்சியில் இப்போதே தீவிரமாகிவிட்டார் மூன்று படங்களின் தயாரிப்பாளர்கள். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்