Home  |  அறுசுவை

ஆலுகோபி மசாலா (Aalu Gobi Spicy)

ஆலுகோபி மசாலா (Aalu Gobi Spicy)

தேவையானவை :

 

சிறிய உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

பச்சைமிளகாய் - 2

இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு

முந்திரிப்பருப்பு - 10

பெரிய வெங்காயம் - 3

கொத்தமல்லித்தழை - சிறிய கட்டு

மிளகாய்த்தூள் - ஒன்றரைத் டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

தக்காளி - 4

காலிஃபிளவர் - ஒன்று

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - கால் லிட்டர்

கரம் மசாலாப்பொடி - அரைத்டீஸ்பூன்

உப்பு - தேவைகேற்ப

 

செய்முறை

 

1.முதலில் மிக்ஸ்சியில் பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து தனியே வைக்கவும்.காலிஃபிளவரை பெரியத் துண்டங்களாக நறுக்கி, நன்கு கழுவி பின் சூடான தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்து வடிகட்டவும்.

 

2.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் காலிஃபிளவரையும், உருளைக்கிழங்கினையும் தனித்தனியேப் பொரித்து எடுக்கவும்.ஒரு அகலமான வாணலியில் வெண்ணெயை விட்டு உருகியதும், அரைத்த விழுதினைச் சேர்த்து மிதமான தீயில் கலந்து வைக்கவும்.சிறிதளவு எண்ணெய்ச் சேர்த்து சீராக கலந்து விடவும்.

 

3.கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது, தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள், மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.ஒரு நிமிடம் கழித்து தேவைகேற்ப உப்பையும், தண்ணீரையும் சேர்க்கவும்.கலவை நன்றாக கொதித்ததும், பொரித்த உருளைக்கிழங்கினைச் சேர்க்கவும்.மேலும் ஒரு கொதி வந்ததும்,கொத்தமல்லித்தழையினைத் தூவி இறக்கவும்.

Aalu Gobi Spicy

Ingredients for Aalu Gobi Spicy :


Small sized Potatoes - 1/2 Kg,

Green Chilies - 2,

Ginger - 1 inch,

Cashew Nuts - 10,

Large Onion - 3,

Coriander Leaves - 1 Bunch ,

Chilly Powder - 1-1/2 Tsp,

Cumin Powder - 1 tsp,

Tomato - 4, 

Cauliflower - 1,

Butter - 2 Tbsp,

Oil - 1/4 Litre,

Garam Masal Powder - 1/2 Tsp,

Salt - as needed.


Method to make Aalu Gobi Spicy :


1. In a mixi grind the green chilies, ginger, cashew nuts, tomato all together. Grind it softly. Cook the potatoes and peel the layer off and keep the potatoes aside. Chop the cauliflower and boil it for 5 minutes in water. Then filter the water and keep the cooked cauliflower aside.

2. Heat oil in a frying pan, fry the cauliflower and potatoes in heated oil. Then keep them aside. Pour butter in a wide pan and heat it. Then add the masala paste in a low heat. Stir it with add some oil.

3. When the oil floats on masala add chilly powder, cumin powder, garam masal powder, coriander powder along with them. After a minute add little salt and water. After it has boiled then add the fried potatoes and cauliflower along with them. Stir it well. turn off the heat.


Aalu Gobi Spicy is ready to serve.

  08 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!