Home  |  திரை உலகம்

ஆஹா கல்யாணம் - திரை விமர்சனம் !!

இயக்கம் : ஏ.கோகுல் கிருஷ்ணா


நடிப்பு : நானி, வாணி கபூர், சிம்ரன், படவா கோபி


இசை : தரண் குமார்


இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற பேண்ட் பாஜா பாரத் என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் ஆஹா கல்யாணம்.  


கல்லூரி படிப்பை முடித்ததும் சொந்தமாக பிசினஸ் தொடங்க வேண்டும் என நினைக்கும் ஹீரோயின் ஸ்ருதி சுப்ரமணியம் (வாணி கபூர்) ‘கெட்டிமேளம்’ என்ற பெயரில் ‘வெட்டிங் பிளானிங்’ நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார். 


‘கெட்டிமேளம்’ நிறுவனத்தின் பார்ட்னராக ஸ்ருதியுடன் கைகோர்க்கிறார் நம்ப ஹீரோ ஷக்தி (நானி). இருவரும் சேர்ந்து படிப்படியாக முன்னுக்கு வருகிறார்கள். ஒரு மிகப்பெரிய கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு பார்ட்டி கொண்டாடும் ஸ்ருதியும், ஷக்தியும் மதுபோதையில் தவறாக நடந்துகொள்கிறார்கள். 


இருவருக்கிடையில் இருக்கும் காதலால்தான் இப்படி நடந்துகொண்டோம் என நினைக்கும் ஸ்ருதி, நானியிடம் காதலைச் சொல்ல வருகிறார். ஆனால் நானி ஸ்ருதியின் காதலைத் தவிர்க்கிறார். அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்...? அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.


ஸ்ருதி, ஷக்திக்கு இடையே நடக்கும் ஈகோ மோதல்கள் நாம் ஏற்கனவே பார்த்த படங்களை நினைவு படுத்துகிறது. 


முதல்பாதி கதைக்குச் சம்பந்தம் இல்லாமல் கலகலப்பாகவும், இரண்டாம்பாதி முழுக்க நாம் எதிர்பார்த்தபடியே நகர்ந்து செல்கிறது. 


ஆனால் படம் முழுக்க முழுக்க கல்யாணக் கொண்டாட்டங்களின் பின்னணியில் ஒரு படத்தைப் பார்ப்பது தமிழ் ரசிகர்களுக்கு இது முதல்முறையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். 


நானியின் டயலாக் டெலிவரி, பாடிலாங்குவேஜ் என அத்தனையிலும் எனர்ஜி பொங்குகிறது. 


வழக்கமான நாயகிகளைப் பார்த்துப் பார்த்து போரடித்த தமிழ் ரசிகர்களுக்கு வாணி கபூரின் நெடு நெடு உயரமும் ஆண்சுபாவம் கலந்த கலையான முகமும் நிச்சயம் கொஞ்சம் நாள் நினைவில் இருக்கும்.  


தமிழ் படம் என்றாலும், டப்பிங் பட உணர்வுதான் உண்டாகிறது.


மொத்தத்தில், ஆஹா கல்யாணம்.... போரடிக்கலப்பா....... 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்