Home  |  ஆன்மிகம்

ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!

ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!

தமிழர்களின் சிறப்பு மிக்க மாதம் ஆடி. சூரியன் கர்க்கடக ராசியில் உட்புகுந்து அதிலிருந்து வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே ஆடி மாதமாகும். பஞ்சாங்க காரணத்திற்காக இந்த மாதம் 31 நாட்கள் உடையதாகக் அறியப்படும்.

முன்முற்காலத்தில் நம் தமிழர் ஆடிப்பிறப்பைச் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர். ஆடி மாதத்தில் வரும் புதுநிலவு மறைந்த குடும்ப முன்னோர்களுக்கு ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் திதி கொடுக்கும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளாக ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு என இம்மாதம் முழுதும் கொண்டாடப்படுகின்றது.

மேலும் ஆடி மாதம் தட்சிணாயனம் அதாவது தென்திசையேகல் ஆரம்பமாகிறது. தமிழ் ஆண்டினை இரண்டு அயனங்களாக (கதிர் நகர்வு) பிரித்து ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் தட்சிணாயனமும், தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயனமும் (வடதிசை நகர்தல்) என்பதாகும்.

அதிகாலை வேளையில் கதிரவன் வடகிழக்கு நோக்கி நகர்தலை விட்டு விட்டு தென்கிழக்கு திசை நோக்கி நகரும். நமது இந்து தொன்மயான இயலில் இது சூரியனின் தேர் திசை திரும்புவதாக அறிப்பிடப்படுகிறது.

ஒன்று மழைக் காலத்தின் துவக்கத்தையும், மற்றொன்று கோடைக் காலத்தின் துவக்கத்தையும் குறிக்கிறது.
கோடி நன்மை தரும் 'ஆடி வெள்ளி' ஆன்மிக ரீதியாக வெள்ளிக்கிழமை சிறப்பு மிகுந்த தினமாக கருதப்படுகிறது. கிழமைகளில் 'சுக்ர வாரம்' என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமை தான் இதன் சிறப்பு.

அள்ளிக் கொடுக்கும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை அன்று, துள்ளித் திரியும் சிங்கத்தின் மேல் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டால், நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம், இறைவியை நாடிச் சென்றவர்களுக்கு எல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் பெருகும் மாதமாகும்.

Aadi suriyan directions
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!