Home  |  திரை உலகம்

ஆதலால் காதல் செய்வீர் ( Aadhalal Kadhal Seiveer )

ஆதலால் காதல் செய்வீர் ( Aadhalal Kadhal Seiveer  )

Movie Name: Aadhalal Kadhal Seiveer ஆதலால் காதல் செய்வீர்
Hero: Santosh Ramesh
Heroine: Manisha Yadav
Year: 2013
Movie Director: SUSEENTHIRAN
Movie Producer: Nallu Studios
Music By: YUVAN SHANKAR RAJA

சந்தோஷ் ரமேஷ் - மனீஷாவுக்கு காதல். சின்னச் சின்ன சில்மிஷங்கள் 'ஓவர் தனிமை’ அளவுக்கு எல்லை மீற, கர்ப்பமாகிறார் மனீஷா. பெற்றோருக்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முயல்கிறார்கள். ஆனால், விஷயம் தெரிந்துவிடுகிறது. காதலர்கள் ஒன்றுசேர நினைக்க, 'கருவைக் கலைக்க வேண்டும்’ என்பதை சந்தோஷின் பெற்றோர் நிபந்தனையாக வைக்கிறார்கள். 'குழந்தைதான் ஒரே ஆதாரம்’ என மனீஷா மறுக்க, வயிற்றுப் பிள்ளையை வைத்து நடத்தப்படும். 'நான் ஹஸ்பண்ட்னு சொன்னா நம்ப மாட்டாங்க...’ என்று தன் காதலியின் கருவைக் கலைக்க நண்பனைக் கணவனாக நடிக்க வைக்குமிடம்..பெரியவர்களுக்கான பகீர்.

ஒரு கணம் உலுக்கியெடுக்கும் அந்த க்ளைமாக்ஸ் பாடல். நட்சத்திரப் பட்டாளம் இல்லாத மொத்தப் படத்தையும் ஒற்றைத் தூணாகத் தாங்கி நிற்பது மனீஷாவின் விழி, இதழ்களும் உடல் மொழிகளும் மட்டுமே! வீட்டில் காதலை மறைக்க மனீஷா செய்யும் சேட்டைகளும் குறும்புகளும். 'உன் பொண்ணு படுத்ததுக்கு எவ்ளோ காசு வேணுமோ, அதை வாங்கிட்டுப் போ’ என்று பஞ்சாயத்துக்களில் தெறித்து விழும் வார்த்தைகளின்போது, ஒரு வார்த்தைக் கூட பேசாமல் விம்மி அழும் காட்சியில் பதற வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். 'நீங்க மாமா ஆகிட்டீங்க’ என்று சந்தோஷை வாழ்த்தும்போது,

'நீங்க வேற... சீக்கிரமே அவன் அப்பாவே ஆகப் போறான்’ என்று கலாய்க்கும் இடங்களில் சிரிக்க வைக்கிறார் அர்ஜுன். 'லவ்வர்ஸை அப்படியே விட்ரணும்... அவங்களா சண்டைபோட்டுப் பிரிஞ்சுடுவாங்க. நாம பிரிக்க நினைச்சாதான், அவங்க காதல் ஸ்ட்ராங் ஆகிரும்’, 'உங்க பொண்ணு செத்துட்டானு நினைச்சு வந்து சேருங்க’... சூழ்நிலைக்கேற்ற சுசீந்திரன் - கிளைட்டனின் நச் நச் வசனங்கள் படத்தின் பலம்! பாடல்கள், ஆனால், காட்சிகளின் வீரியத்துக்காக அந்தப் பச்சைக் குழந்தையை படாதபாடு படுத்தியிருப்பது... பயங்கரம்! பின்னணி இசை இரண்டிலும் ஏன் இத்தனை ஆவரேஜ் ஸ்கோர் யுவன்? முன்பாதியில் கேம்பஸ் உற்சாக வண்ணங்கள் பொழியும் ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு, க்ளைமாக்ஸ் காட்சிகளில் அழுத்தம் சேர்க்கிறது.

'

  17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்