Home  |  தொழில் நுட்பம்

ஒரு நிமிடத்தில் சார்ஜ் ஆகும் புதிய பேட்டரி! வெடிக்கவோ, தீப்பிடிக்கவோ செய்யாதாம்!!

ஒரு நிமிடத்தில் சார்ஜ் ஆகும் புதிய பேட்டரி! வெடிக்கவோ, தீப்பிடிக்கவோ செய்யாதாம்!!

உலகெங்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியனை தாண்டிவிட்டது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளர்கள் இப்போது எதிர்பார்ப்பது என்னவோ, சீக்கிரம் சார்ஜ் ஆகக்கூடிய, வேகு நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய பேட்டரிகளுக்காகத்தான்.

அந்த நோக்கத்தோடு பல பேட்டரி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்து வருகின்றன. ஆனால், சமீபத்தில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பேட்டரி விஷயத்தில் செய்த ஆராய்ச்சியின் முடிவுகள் பலருக்கு மகிழ்ச்சியை தந்திருக்கின்றன. உலகெங்கும் பரவலாக மொபைல்களில் பயன்படுத்தப்படுவது லித்தியம் அயான் மின்கலன்கள்தான். ஆனால் ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் அலுமினியம் அயான் மின்கலன் ஒன்றை தயாரித்திருக்கின்றனர். இதன் அற்புத அம்சமே ஒரு நிமிடத்திற்குள் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும் என்பதுதான்.

நாங்கள் உருவாக்கியிருக்கும் ரீசார்ஜ் செய்யக்கூடிய அலுமினியம் மின்கலன் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காது. மேலும் தற்போது உள்ள சில வகை மின்கலன்களைப்போல வெடிக்கவோ, தீப்பிடிக்கவோ செய்யாது. நீங்கள் அதை ஆணி வைத்து அடித்தாலும் வெடிக்காது என்கிறார் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியரும், மின்கலன் ஆய்வு குழுவின் தலைவருமான ஹோன்ஜி டாய். சீக்கிரம் சார்ஜ் ஆகும் ஸ்டான்போர்ட் மின்கலன் இப்போது சோதனை அளவில் வெற்றி பெற்றிருப்பது உற்சாகம் தரும் செய்திதான்.

இதை வர்த்தக ரீதியில் தயாரிக்கும்போது விலை சற்று அதிகமாக இருக்கும் என்கின்றனர் சந்தை வல்லுனர்கள். 

  06 Aug 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!