Home  |  நாட்டு நடப்பு

கருப்பு பண ஒழிப்பு முழு தோல்வி - 97% தடை செய்யப்பட்ட நோட்டு வங்கிக்கே வந்தது..!!

கருப்பு பண ஒழிப்பு முழு தோல்வி - 97% தடை செய்யப்பட்ட நோட்டு வங்கிக்கே வந்தது..!!

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களில் 97 சதவீதம் வங்கிகளில் மீண்டும் செலுத்தப்பட்டு விட்டதால் மோடி அறிவித்த DEMONITISATION திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கறுப்புப் பனம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்படமுடியாமல் முடங்கின,

பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. வெறும் 2000 ரூபாய்க்காக பொதுமக்கள் நாள் முழுவதும் வங்கி மற்றும் ஏடிஎம் வாசல்களில் நிற்க வேன்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனாலும் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்காக மக்கள் சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் என மோடி வேண்டுகோள் விடுத்தார்.

15 லட்சம் கோடி அளவுக்கு 500 ,1000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டிருந்த நிலையில் அனைத்துப் பணமும் டெபாசிட் செய்யமாட்டார்கள். இதனால் கறுப்புப் பணத்தை ஒழித்து விடலாம் என கனவு கண்டு கொண்டிருந்த மோடியின் கனவில் மண் விழுந்தது.

ஆம் டிசம்பர் 30 க்குள் கிட்டத்தட்ட 14 புள்ளி 97 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது, அப்போ கறுப்புப் பணம் எங்கே என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் ஆட்சியாளர்கள்.

அதுபோக 2016 ம் ஆன்டு  2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வரும் என எதிர்பார்திதிருந்த நிலையில் தற்போது 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.

கறுப்புப் பணமும் எதிர்பார்த்த அளவு பிடிபடாத நிலையில் நாட்டிற்கான முதலீடுகளும் குறைந்து  போயுள்ளதால் மொத்தத்தில் மோடியின் இந்த DEMONITISATION திட்டம் தோல்வியடைந்து விட்டதாகவே பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

DEMONITISATION Failiure
  05 Jan 2017
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
சதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா?
அதுக்கு 9.. இதுக்கு 6 தான்.. கோஹ்லி செம டென்ஷன்!
"செல்லாத 500 ரூபாய் நோட்டில் இருந்து மின்சாரம்..!!" - மாணவரின் அபார கண்டுபிடிப்பு!!!
ஜோதிடர் பேச்சை கேட்டு தினகரன் செய்த செயல்: போலிசார் முக்கிய தகவல்
தமிழகத்தில் மலர பா.ஜ.க.,அசத்தல் திட்டம் : ஆட்சியை கவிழ்ப்பதில்லை அதைவிட வேற…வேற…
நாளை 18 மாவட்டங்களுக்கு பேராபத்து..! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!
பன்னீர்-எடப்பாடி இணைவில் ஒன்றுபட்ட அதிமுக உருவாகிறது:தினகரன் வெளியேறுகிறார்!
நடுவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிய வார்னர்!
தோ்தல் ரத்து..? டிடிவி தினகரன் கைது..? தோ்தல் ஆணையம் சாட்டையை கையில் எடுக்குது..!
ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சைக்கு தடை விதித்தது யார்? உண்மையை உடைத்த ஓ.பி.எஸ்..,