Home  |  திரை உலகம்

ஒரே நேரத்தில் துவங்கப்பட்ட ஏழு படங்கள் !

ஒரே நேரத்தில் துவங்கப்பட்ட ஏழு படங்கள் !

ஒரு படம் எடுக்கவே முச்சு முட்டுது நாக்கு தள்ளுது. அப்படியிருக்கையில் போஃக் அண்ட் க்ருவ் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனமும், க்யூ லாயூரட் என்ற நிறுவனமும் இணைந்து 7 படங்களை தயாரித்து ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். அந்த படங்களின் பெயர்கள் விவரம் வருமாறு:

1.ஜனவரி மழையில் ஒரு ஹாய்

2.கடவுள் இருக்கான் குமாரு

3.லந்து

4.கொள்ளக்கூட்ட பாஸ்

5.வட்ட செயலாளர் வண்டு முருகன்

6.நீங்க புடுங்கிற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணிதான்

7.கோக்

சமீபத்தில் இந்த 7 படங்களின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ‘ஸ்டுடியோ 9’ நிறுவன அதிபர் சுரேஷ் உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த ஏழு படங்களும் காமெடியை பின்னணியாகக் கொண்டு குறுகிய கால தயாரிப்பில் சிறு பட்ஜெட் படங்களாக தயாராகவுள்ளன. 7 படங்களின் கதையையும் ராஜேஷ் கண்ணன் எழுதியதோடு மட்டுமல்லாமல் அவற்றில் ‘ஜனவரி மழையில் ஒரு நாள்’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களை அவரே இயக்கவும் செய்திருக்கிறார். ஏற்கெனவே இவர் பெருமாள் என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார்.

இம்முயற்சி பற்றி ராஜேஷ் கண்ணன் பேசும்போது.. “எனக்கு சினிமா என்றால் உயிர். ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். பலதுறைகளிலும் வேலை பார்ப்பேன். சினிமாவுக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. அஜித் எனக்கு நல்ல நண்பர். ஒருநாள் கேட்டார். வாழ்க்கையில் என்ன ப்ளான் வச்சிருக்கே. நான் பல வேலை செய்வதை சொன்னேன். இப்படி பலவற்றில் ஈடுபடுவது சரியாக இருக்காது. ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது ஒரு நிறுவனம் ஆரம்பித்து செய்ய வேண்டும்.

அதற்கு முதலில் தேவை விசிட்டிங் கார்டு என்று தெளிவு படுத்தி தொடங்கி வைத்தார். அதை மறக்க மாட்டேன். நான் பலரிடம் கதை சொல்லி 52 கதைகள் உருவாக்கிவிட்டேன். ஒருகட்டத்தில் சலித்துவிட்டு இம் முயற்சியில் ஈடுபட முடிவு செய்தேன். நண்பர்கள் கை கொடுத்தார்கள். என்னைப் பொறுத்தவரை எல்லாமே மேட் இன் ப்ரண்ட்ஷிப் என்றுதான் சொல்வேன். ஒரு படம் எடுக்கவே முச்சு முட்டுது நாக்கு தள்ளுது.. காதுல ரத்தம் வருது இந்த லட்சணத்தில் 7 படமா என்கிறார்கள். புதியதை வரவேற்கத் தயாராக இருக்கும் ரசிகர்களை நம்பி இறங்கியிருக்கிறோம் “என்றார்.

  23 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
மெர்சல் ரிலீசாகாது..!இப்படி ஒரு பிரச்சனையா!..
தளபதி ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- மெர்சல் ஸ்பெஷல்
'விவேகம்' ட்ரெய்லர்ல இதையெல்லாம் கவனிச்சீங்களா..? #VivegamTrailer
BiggBossல் இருந்து வெளியேறிய ஷக்தியின் முதல் பதிவு- இனி தான் என் ரியல் கேம் ஆரம்பம்
ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!
மெர்சல் படக்குழுவினர்களுக்கு விஜய் கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ்
விவேகம் படத்தை பார்த்த பிறகு அஜித்தின் ரியாக்‌ஷன் இதுதான்
விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, தமிழகத்தில் தளபதி படம் மட்டுமே நிகழ்த்திய சாதனை
BiggBossல் ஜுலி தான் ஜெயிப்பார்- பிரபல நடிகரின் டுவிட்
விவேகம் இரண்டாவது பாடல் பற்றி அனிருத் அதிரடி தகவல்