Home  |  ஆன்மிகம்

அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம், திருவாரூர்

Name: அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவாலயம்
Mulavar: மதுவனேஸ்வரர் ( கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாச நாதர்)
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம்- 610 105. திருவாரூர் மாவட்டம்.
Town: நன்னிலம்
District: திருவாரூர் [ Thiruvarur ]-610 105.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், 
சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் 
சிறப்பம்சமாகும்.இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். 270 அடி நீளமும், 135 அடி அகலமும் 
கொண்ட பரப்பில் கோயில் அமைந்துள்ளது. கோபுரம் 30 அடி உயரம், இரண்டு நிலை, 5 கலசங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சிவன் 
கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். கோயில் உள்ளே அமைந்துள்ள சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, 
சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், 
நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்தின் அருகில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது. 

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.

இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்ட பரப்பில் கோயில் அமைந்துள்ளது. கோபுரம் 30 அடி உயரம், இரண்டு நிலை, 5 கலசங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சிவன் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர்.

கோயில் உள்ளே அமைந்துள்ள சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. 



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!