Home  |  ஆன்மிகம்

அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்

Name: அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில்
Temple Type: சிவாலயம்
Mulavar: மாயூரநாதர் ( வள்ளலார்)
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: நிர்வாக அதிகாரி, அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை - 609 001. நாகப்பட்டினம் மாவட்டம்.
Town: மயிலாடுதுறை
District: நாகப்பட்டினம் [ Nagapattinam ]-609 001.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் திரிதளம் எனப்படும். இத்தல விநாயகர் அகத்திய விநாயகர் எனப்படுகிறார். இங்குள்ள கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. இங்கு நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் அருள்புரிகிறார். இக்கோயிலில் ஆதி மாயூரநாதருக்கு பிரகாரத்தில் தனி சன்னதி இருக்கிறது. இங்கு சுவாமி லிங்கமாக இருக்க, அருகில் அம்பாள் மயில் வடிவில் அவரை வழிபட்ட கோலத்தில் இருக்கிறாள். சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள முருகனைக் குறித்து அருணகிரியார் பதிகம் பாடியிருக்கிறார்.

பெரும்பாலான சிவாலயங்களில் கந்த சஷ்டியின்போது, முருகன் அம்பாளிடம்தான் வேல் வாங்குவார். ஆனால், இத்தலத்தில் சிவனிடம் வேல் வாங்குவது விசேஷம். சிவனது கௌரி தாண்டவத்தை, "மயூரதாண்டவம்' என்றும் சொல்கிறார்கள். இந்த நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னதி இருக்கிறது. அம்பாள், சிவன் இருவரும் மயில் வடிவத்தில் இருக்கின்றனர். ஐப்பசி விழாவில் சிவன், அம்பாளுக்கு நடனக்காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கிறது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!