Home  |  ஆன்மிகம்

அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர், விழுப்புரம்

Name: அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவாலயம்
Mulavar: கிருபாபுரீசுவரர்(அருட்கொண்ட நாதர், ஆட்கொண்டநாதர், வேணுபுரீசுவரர்)
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு கிருபாபுரீசுவரர் திருக்கோயில், வெண்ணெய்நல்லூர்-607 203. விழுப்புரம் மாவட்டம்.
Town: வெண்ணெய்நல்லூர்
District: விழுப்புரம் [ Villupuram ]-607 203.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூரத்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் 
கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது.இத்திருக்கோயில் திருவருட்டுறை என்ற 
பெயருடையது. கருவறையில் அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற மேனியாக காட்சி தருகிறாள். சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் 
பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.  இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார்.
இங்குள்ள சண்முகநாதர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர்.முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி 
தந்த திருத்தலம்.மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் 
நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி , ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இங்கு இருப்பது சிறப்பு.கருவுற்றப் பசுவை 
வேள்வி செய்த பாவத்தை வித கோத்திரர் என்னும் அந்தணர் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து போக்கிக் கொண்டார்.
சடையப்ப வள்ளல் இவ்வூரில் வாழ்ந்திருக்கிறார் என்ற சிறப்பும் முக்கியமானது.

இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூரத்தியாக அருள்பாலிக்கிறார். கிழவராக வந்து சுந்தரரோடு வழக்கு செய்த ஈசன் லிங்கமாக ஐக்கியமாகும் முன் கருவறைக்கு முன்பாக தான் கழற்றி வைத்த காலணி பாதுகைகள் இன்னமும் இத்தலத்தில் உள்ளது. இத்திருக்கோயில் திருவருட்டுறை என்ற பெயருடையது. கருவறையில் அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் நின்ற மேனியாக காட்சி தருகிறாள்.

சுந்தரருக்கும், கிழவனாக வந்த ஈசனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது.  இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார். இங்குள்ள சண்முகநாதர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர். முருகன் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு மயிலோடு நடனமாடி காட்சி தந்த திருத்தலம்.

மகிசனை வதம் செய்ததால் ஏற்பட்ட ஆக்ரோசம் நதியில் குளித்து மங்களம் பெற்ற தலம் என்பதால் மங்களாம்பிகை சந்நதியில் நந்திக்கு பதில் சிம்மம் இருக்கும். சங்க நிதி, பதுமநிதி , ஸ்ரீ சக்கரத்துடன் சிம்ம வாகனத்துடன் அம்பாள் இங்கு இருப்பது சிறப்பு. கருவுற்றப் பசுவை வேள்வி செய்த பாவத்தை வித கோத்திரர் என்னும் அந்தணர் இத்தலத்திற்கு வந்து அருட்டுறை தீர்த்தத்தில் நீராடி பாடிப்பணிந்து போக்கிக் கொண்டார். 



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!