Home  |  ஆன்மிகம்

அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், வேள்விக்குடி, நாகப்பட்டினம்

Name: அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவாலயம்
Mulavar: கல்யாண சுந்தரேஸ்வரர், மணவாளேஸ்வரர்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேள்விக்குடி - 609 801, குத்தாலம் போஸ்ட். நாகப்பட்டினம் மாவட்டம்.
Town: வேள்விக்குடி
District: நாகப்பட்டினம் [ Nagapattinam ]-609 801.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார். திருத்துருத்தியாகிய குத்தாலத்தோடு சேர்த்து பாடப்பட்ட திருத்தலம் இது. திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.

அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அழகு. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள். பார்வதியின் துயரத்தை போக்கிட்ட சிவன், இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!