Home  |  ஆன்மிகம்

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், திருப்பழனம், தஞ்சாவூர்

Name: அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
Temple Type: சிவாலயம்
Mulavar: ஆபத்சகாயர்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் , திருப்பழனம் அஞ்சல். திருவையாறு 613 204 . தஞ்சாவூர் மாவட்டம்.
Town: திருப்பழனம்
District: தஞ்சாவூர் [ Thanjavur ]-613 204.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

 

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் 
மேல்படுகிறது. பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை, பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் 
சந்நிதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் 
சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன. 
கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து 
பேறுபெற்ற தலம். இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த  இடமாதலால் திருப்பழனம் என்று பெயர்.
ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும்போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்தபோது இறைவன் 
அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர்.

இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்குமுன்பின் இரண்டு நாட்களிலும் நிலா சுவாமியின் மேல்படுகிறது. பழமையான ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரமில்லை, பலிபீடம் நந்தி உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது.

 விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன. கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்குண்டு. சந்திரன் வழிபட்ட தலம். குபேரன், திருமால், திருமகள், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலம்.

இத்தலம் சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.அழகிய வயலும் வயல் சார்ந்த இடமும் சூழ்ந்த  இடமாதலால் திருப்பழனம் என்று பெயர்.ஒரு சமயம் அந்தணச் சிறுவன் ஒருவனை எமதருமன் துரத்திக் கொண்டு வரும்போது அச்சிறுவன் இத்தலத்து இறைவனைச் சரணடைந்தபோது இறைவன் அச்சிறுவனுக்கு காட்சியளித்து ஆபத்தில் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆபத்சகாயேசுரர் என்று பெயர்.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!