Home  |  திரை உலகம்

2014-ல் டாப் 5 தமிழ் ஹீரோக்கள் !!

2014-ல் டாப் 5 தமிழ் ஹீரோக்கள் !!

இந்த ஆண்டில் அதிக படங்கள் வெளியாகி தமிழ் சினிமா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கூட 4 புதிய படங்கள் வெளியாகின. இந்த ஆண்டில் கமல் ஹாஸன், விக்ரம், சிம்பு தவிர தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகி அவரவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

வெளியான படங்கள், வசூல் மற்றும் வெற்றியின் அடிப்படையில் இந்த ஆண்டின் டாப் 5 ஹீரோக்களின் பட்டியல் இதோ,

ரஜினிகாந்த் :

ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகின. இதில் கோச்சடையான் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நேரடியாக நடித்த லிங்கா படம் தமிழ், தெலுங்கில் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. அதன் இந்திப் பதிப்பு கடந்த 26-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்பார்ப்பையும், நல்ல வசூலையும் குவித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

மூன்றே நாட்களில் ரூ 104 கோடி வசூலைக் குவித்தது இந்தப் படம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிட்ட அனைத்து இடங்களிலும் இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது இந்தப் படம். கிறிஸ்துமஸுக்கு வந்த நான்கு படங்களின் முடிவுகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததால், லிங்காவுக்கு இப்போதும் நல்ல கூட்டம்.

விஜய் :

ரஜினியைப் போல விஜயும், தனது நடிப்பில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். ஒன்று ஜில்லா. மற்றொன்று கத்தி. ஜில்லா படம் பேபி ஆல்பட்டில் ஒரு காட்சியாக மட்டும் நூறு நாட்கள் ஓடியது.
ஆனால் படத்தின் வசூல் திருப்திகரமாக இல்லை என்று தயாரிப்பாளர் தரப்பிலேயே கூறிவிட்டார்கள்.

அடுத்து கடந்த தீபாவளியன்று பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் வெளியானது கத்தி. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், படத்தின் வசூல் ரூ 100 கோடியைத் தொட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு விஜய்க்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

அஜீத் :

அஜீத் நடித்த வீரம் படம் கடந்த பொங்கலன்று வெளியானது. பார்த்தவர்களை மகிழ்விக்கும் அளவுக்கு ஜாலியான படமாக அமைந்தது வீரம். அஜீத் படங்களுக்கே உரிய பிரமாண்ட ஓபனிங் இருந்தாலும், படம் எதிர்ப்பார்த்த வசூலைப் பெறவில்லை. பரவாயில்லை எனும் அளவுக்கே அமைந்த வெற்றி இது.

தனுஷ் :

தனுஷுக்கு அமைந்த மிகப்பெரிய வெற்றிப் படம் என்றால் அது வேலையில்லா பட்டதாரி. ஓபனிங் மட்டுமல்ல, வார நாட்களில் வந்த வசூலும் அமோகமாகவே அமைந்தது. முதல் 5 நடிகர்களில் ஒருவராகும் அளவுக்கு தனுஷின் பாக்ஸ் ஆபீஸ் ரேங்கையும் இந்தப் படம் உயர்த்திவிட்டது.

சிவகார்த்திகேயன் :

கடந்த வருடம் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி, மான் கராத்தே படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தரவில்லை என்றாலும், அவரது மார்க்கெட் மிகவும் வலுவாக உயர்ந்தது இந்த ஆண்டில்தான். ஒரு நடுத்தர படத்தின் மொத்த பட்ஜெட், இவரது சம்பளமாக மாறிவிட்டதால், இந்த ஆண்டு முதல் நிலை நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார்.

  29 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்