Home  |  திரை உலகம்

சின்னத்திரை தொலைகாட்சிகளில் பொங்கல் ஸ்பெஷல் திரைப்படங்கள் : ஆரம்பம், பாண்டியநாடு, தலைவா, ராஜா ராணி......

தமிழர்களின் பாரம்பரியமிக்க விழாவாக கருதப்படும் பொங்கல் பண்டிகை வரும் 13-ம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கி காணும் பொங்கல் வரை நான்கு நாட்கள் நடைபெறும். தொடர் விடுமுறையின் காரணமாக பொங்கலின் போது அதிக படங்கள் ரிலீசாவது வழக்கம். அதே போல் சின்னத்திரையிலும் ஹிட் ஆன திரைப்படங்கள் ஒளிபரப்பாவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் நோக்கில் சின்னத்திரை தொலைகாட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசான பெரும்பாலான படங்களை தற்போது பொங்கலுக்கு ஒளிபரப்ப இருக்கின்றன. இது குறித்த விரிவான தகவல்கள் இதோ,

 

ஆரம்பம்

 

அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்சி நடித்து சூப்பர் ஹிட்டான ஆரம்பம் திரைப்படம், ஜெயா டிவியில் பொங்கலை முன்னிட்டு ஒளிபரப்பாக உள்ளது.

 

பாண்டியநாடு

 

விஷால், லட்சுமி மேனன் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் பாண்டியநாடு ராஜ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

 

தலைவா 

 

விஜய், அமலாபால் நடித்த தலைவா திரைப்படம் சன் டிவியில் ஜனவரி 14ம் தேதி ஒளிபரப்பாகிறது.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

 

சிவகார்த்திக்கேயன், ஸ்ரீ திவ்யா நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் கலைஞர் டிவியில் பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகிறது.   

 

ராஜா ராணி

 

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜா ராணி திரைப்படம் விஜய் டிவியில் பொங்கல் சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பாகிறது. 

 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 

 

விஜய் சேதுபதி, நந்திதா நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 

 

தேசிங்கு ராஜா 

 

விமல், பிந்துமாதவி சூரி நடித்த தேசிங்குராஜா திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 

 

இந்த பொங்கல் புது படங்களின் பொங்கல் டோய்ய்ய்................

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்