Home  |  திரை உலகம்

2014ல் நினைவில் நின்ற படங்கள்...

2014ல் நினைவில் நின்ற படங்கள்...

கோலிவுட்டில் கடந்த வருடம் மட்டும் சுமார் 215 படங்கள் வெளியாகி சாதனை படைக்கப்பட்டது.

படங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவற்றில் நூறு நாட்களைக் கொண்டாடாவிட்டாலும், பாராட்டுகளையும் போட்ட முதல் பணத்தையும் எடுத்த படங்கள் என்று பார்த்தால் எண்ணிக்கை முப்பதை தாண்டாது. அவற்றில் சிறந்த பத்து படங்களைப் பற்றி இங்கு காண்போம்.

கோலி சோடா

கடந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த படம் இது. விஜய் மில்டன் இயக்கத்தில், பசங்க பட டீம் மீண்டும் இணைந்த படம் இது. சின்ன முதலீடு, பெரிய வெற்றி என்று வசூல் ரீதியாக பாராட்டப்பட்ட இந்த படம் சினிமா விமர்சகர்கள் பலரின் நற்பெயரையும் பெற்றது.

மெட்ராஸ்

பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி - கேதரைன் தெரசா நடித்த இந்தப் படம் வட சென்னை மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தது. பாராட்டுகள் மட்டுமல்ல, வசூலிலும் சோடை போகவில்லை.

சதுரங்க வேட்டை

தமிழகத்தில் பரவலாக நடந்த ஏமாற்று வேலைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் இது. சுவாரஸ்யமான படம். வணிக ரீதியில் நன்றாகவும் போனது. வினோத் இயக்கியிருந்தார்.

ஜீவா

சுசீந்திரனின் துணிச்சலான முயற்சி இந்தப் படம். நாங்கள் உயர்சாதி, கிரிக்கெட் வாய்ப்பெல்லாம் எங்களுக்கு மட்டும்தான் என மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் கழிசடைகளின் முகத்திரையைக் கிழித்த படம்.

முண்டாசுப்பட்டி

இந்த ஆண்டில் வந்த முக்கிய படங்களில் ஒன்று என்ற தகுதி முண்டாசுப்பட்டிக்கு உண்டு. ராம் என்பவர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் விஷ்ணு, நந்திதா நடித்திருந்தனர்.

ஜிகிர்தண்டா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இன்னொரு சுவாரஸ்யமான படம் ஜிகிர்தண்டா. வெற்றிப் படமும் கூட.

தெகிடி

இதுவும் வணிக மோசடிகள் பற்றி எடுக்கப்பட்ட ஒரு நல்ல படம். ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருந்தார். வணிக ரீதியிலும் நல்ல பலனை ஈட்டித் தந்தது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

ஆர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் அவருக்கு பெரும் திருப்புமுனையைத் தந்தது. கதை சொன்ன விதம், காட்சிகளை உருவாக்கிய விதம் என அனைத்திலுமே பார்த்திபன் கலக்கியிருந்தார்.

மஞ்சப்பை

ராகவன் இயக்கத்தில் விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் ஆகியோர் நடித்த படம் இது. தாத்தா பேரன் இடையே உள்ள பாசத்தை விளக்கும் படம் இது.

யாமிருக்க பயமே

எதிர்பாராத வெற்றியைப் பெற்ற படங்களில் இந்த யாமிருக்க பயமேவும் ஒன்று. பேய் ப்ளஸ் காமெடி கலந்த சுவாரஸ்ய படமாக வந்து வெற்றியைப் பெற்றது. 

  01 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்