Home  |  தொழில் நுட்பம்

கடந்த ஆண்டுடன் பிரியா விடைபெற்ற முக்கியமான தொழில்நுட்ப சேவைகள் !!

கடந்த ஆண்டுடன் பிரியா விடைபெற்ற முக்கியமான தொழில்நுட்ப சேவைகள் !!

கடந்த ஆண்டில் பல்வேறு விதமான தொழில்நுட்ப சேவைகள் நம்மிடையே இருந்து விடைபெற்றன. அதில் ஆர்குட், வின்டோஸ் எக்ஸ் பி, எம் எஸ் என் மெசஞ்சர் போன்றவை குரிப்பிடவேண்டியவை. இந்த தொழில்நுட்ப சேவைகள் சந்தைக்கு வந்த போது, பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் நாட்கள் செல்ல செல்ல தொழில்நுட்பங்கள் பெருகி கொண்டே போக அந்த தொழில்நுட்பங்களை மீண்டும் ஒரு தொழில்நுட்பம் சரிகட்டி, ஓரங்கட்டி சரிவுகளில் தள்ளி விடுகிறது.

அப்படி பழைய தொழில்நுட்பங்களாய் மாறி போய் இந்த 2014ஆம் ஆண்டில் நம்மிடம் இருந்து விடைபெற்ற முக்கியமான தொழில்நுட்பங்களை பற்றி இங்கு காண்போம்.

வின்டோஸ் XP:

கடந்த 2001 ம் ஆண்டு வெளிவந்த இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய கண்டுபிடிப்பு. கடந்த 13 ஆண்டுகளாக எல்லா கணினிகளிலும் இடம் பிடித்துள்ளது. இன்றளவும் கூட அனைத்து அலுவலகங்களிலும் இந்த இயங்குதளம் தான் பயன்பட்டு வருகிறது. இச்சேவையை கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

ஆர்குட்:

உலகளவில் சமூக வலைத்தளங்களில் முதன்மையான ஆர்குட் சேவை கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் நிறுத்தியது கூகுள் நிறுவனம். இந்த ஆர்குட் சமூகவலைத்தளம் 2004ஆம் ஆரம்பிக்கப்பட்டது. இதே ஆண்டில் தான் ஃபேஸ்புக்கும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக் தற்போது உலகளவில் 128 கோடி பயனாளர்களுடன் முதல் இடத்தை பிடித்து மற்ற சமூக வலைதளங்களுக்கு எல்லாம் சவால் விட்டு வருகிறது.

எம் எஸ் என் மெசஞ்சர்:

உலகின் முதன்மையான சாட் மற்றும் உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்ய பயன்பட்ட சேவை இது. 15 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது இச்சேவை. கடந்த 2005 ஆம் ஆண்டு வின்டோஸ் லைவ் மெசஞ்சர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்கைப் சேவையுடன் இச்சேவையை இணைத்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் 3 கோடிக்கு அதிகமான புது வாடிக்கையாளர்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!