Home  |  திரை உலகம்

இந்த மாதத்தில் மட்டும் 15 படங்கள் ரிலீஸ் !!

இந்த மாதத்தில் மட்டும் சுமார் 15 தமிழ் திரைப்படங்கள் தமிழக திரையரங்குகளில் வலம் வரப்போகின்றன. 


இவற்றில், குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட சிறு பட்ஜெட் படங்களும் ரூ.8 கோடி வரை செலவிட்டு எடுக்கப்பட்ட பெரிய படங்களும் அடங்கும்.


வருகின்ற 6–ந் தேதி, மஞ்சப்பை, உன் சமையல் அறையில் ஆகிய இரு படங்கள் வெளியாக இருக்கின்றன. 


மஞ்சப்பை படத்தில் விமல், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்தள்ளனர். லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து உள்ளனர்.


உன் சமையல் அறை படத்தில் பிரகாஷ் ராஜ், சினேகா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை பிரகாஷ்ராஜே இயக்கி தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.


வருகிற 13–ந்தேதி முண்டாசுப்பட்டி, நான்தான் பாலா, மெல்லிசை ஆகிய மூன்று படங்கள் வருகின்றன.  


வருகிற 20–ந்தேதி அரிமா நம்பி, பூலோகம் படங்கள் வருகிறது. 


அரிமா நம்பியில் விக்ரம் பிரபு நாயகனாக நடித்துள்ளார். கலைப்புலி தாணு தயாரித்து உள்ளார். 


பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, திரிஷா ஜோடியாக நடித்துள்ளனர்.


27–ந்தேதி சித்தார்த் நடிக்கும் ஜிகர்தண்டா, விஜய் இயக்கிய சைவம் படங்கள் ரிலீசாகின்றன. 


ஜெய் நடிக்கும் திருமணம் எனும் நிக்காஹ், சுந்தர். சி இயக்கிய அரண்மனை உள்ளிட்ட மேலும் சில படங்களும் இம்மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்