Home  |  ஆரோக்கியம்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் 12 உணவுகள் !!

இன்றைய இந்தியர்கள் பலர் சர்க்கரை நோய்க்கு ஆளாவதாக சமீபத்திய கருத்து கணிப்பு ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. சர்க்கரை நோய்(நீரிழிவு நோய்) என்பது வளர்சிதைமாற்ற நோய்களின் ஒரு தொகுப்பாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். 

 

இந்த சர்க்கரை நோயை சரியான உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. ஆதாலால் தற்போது, மருத்துவ வல்லுனர்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 12 வகை உணவுகளை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

 

பால் :

 

பாலில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டின் அளவு சரியான விகிதத்தில் அமைந்திருக்கின்றன. அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது. 

 

தானிய வகைகள் : 

 

தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங்கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

 

தக்காளி :

 

சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, தினமும் காலை வெறும் வயிற்றில், உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை பருக வேண்டும்.

 

வெந்தயம்: 

 

ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

 

பாதாம் : 

 

தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். 

 

நார் சத்து உள்ள காய்கறிகள் : 

 

அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். 

 

பழங்கள் : 

 

அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால், அதனை அதிகமாக உண்ணக் கூடாது. 

 

பருப்பு வகைகள் : 

 

பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது. 

 

உணவு முறை: 

 

ஒரே சமயத்தில் அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். 

 

இயற்கை இனிப்பு : 

 

நிரிழிவு நோயாளிகள், இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம். 

 

தண்ணீர் :

 

அதிகமான தண்ணீர் மற்றும் நார்ச்சத்து உள்ள பழச்சாறுகளை பருக வேண்டும்.

 

அசைவ உணவு: 

 

சர்க்கரை நோயாளிகள், ஆடு மற்றும் ரெட் மீட் எனப்படும் மாட்டு இறைச்சி உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மீன் அல்லது கோழிக்கரியை சாப்பிடலாம். 

 

மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, சர்க்கரை நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!