Home  |  ஆன்மிகம்

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திரு ஊரகம், காஞ்சிபுரம்

Name: அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில்
Temple Type: திவ்ய தேசம்
Mulavar: உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திரு ஊரகம் காஞ்சிபுரம் - 631 502. காஞ்சிபுரம் மாவட்டம்
Town: திரு ஊரகம்
District: காஞ்சிபுரம் [ Kanchipuram ]-631 502.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.பாதாள லோகத்திலேயே உலகளந்த கோலம் காட்ட வேண்டி பெருமாளை குறித்து, மகாபலி கடும் தவம் இருந்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், அவனுக்கு இத்தலத்தில் உலகளந்த திருக்கோலத்தை காட்டினார்.

     இவனோ பாதாள உலகத்தில் இருந்தான். எனவே அவனால் பெருமாளின் திருக்கோலத்தை முழுமையாக தரிசிக்க முடியவில்லை. எனவே மீண்டும் பெருமாளிடம் மன்றாடினான். பெருமாள் இவனுக்கு காட்சி தருவதற்காக இதே இடத்தில் ஆதிசேஷனாக காட்சியளித்தார். இந்த இடமே தற்போது திருஊரகம் என அழைக்கப்படுகிறது. இது உலகளந்த பெருமாளின் மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் உள்ளது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!