Home  |  ஆன்மிகம்

அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி

Name: அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில்
Temple Type: திவ்ய தேசம்
Mulavar: ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி - 628 612 தூத்துக்குடி மாவட்டம்
Town: ஆழ்வார் திருநகரி
District: தூத்துக்குடி [ Thoothukudi ]-628 612.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதியில் இது 5 வது திருப்பதி.இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. நவதிருப்பதிகளுள் குருவுக்குரிய தலமாகும். பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், மதுரகவியாழ்வார் இத்தலத்தில் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார்.

     நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். 108 திருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார்திருநகரி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தாந்தன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய பக்தனுக்கு மோட்சம் தந்ததால் இத்தலத்திற்கு தாந்த கே்ஷத்திரம்' என்றும் பெயர்.பாண்டி நாட்டு நவதிருப்பதிகளுள் இத்தலம் குருவுக்குரிய தலமாகவும், ஒன்பதாவது தலமாகவும் அமைந்துள்ளது.

     வைணவர்கள் ஷ்ரீரங்கத்தை பரமபதத்தின் வாசல் எனவும், ஆழ்வார் திருநகரியை பரமபதத்தின் எல்லை எனவும் கூறுவார்கள். மூலவரின் சன்னதிக்கு எதிர்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகள் நிறுவினார். பெருமாளின் விமானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியது. மரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடிநீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.  



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!