Home  |  ஆன்மிகம்

அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில், திருவாலி, நாகப்பட்டினம்

Name: அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில்
Temple Type: திவ்ய தேசம்
Mulavar: அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
Year: 1000-2000 வருடங்களுக்கு முன்
Address: அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருவாலி திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம்
Town: திருவாலி
District: நாகப்பட்டினம் [ Nagapattinam ]-609 106.
State: தமிழ்நாடு [ Tamil nadu ]
Country: இந்தியா [ India ]

     பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள்.

     பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.



  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!