Home  |  திரை உலகம்

மூன்று நாளில் 100 கோடி : இது லிங்கா அப்டேட் !!

மூன்று நாளில் 100 கோடி : இது லிங்கா அப்டேட் !!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி நடிப்பில் உருவாக்கி கடந்த டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் வெளியான படம் லிங்கா.

பிரமாண்டமாக வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 3000 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்த நேரடிப் படம் என்பதால் படத்துக்கு கூட்டம் அலைமோதியது. தமிழகத்தைப் போலவே, வெளிநாடுகளிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். அரங்குகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய சாதனையே நிகழ்ந்தது. முதல் நாள் மட்டும் ரூ 37 கோடியைக் குவித்தது லிங்கா படம். இது ரெகுலர் ஷோக்கள் மூலம் வந்த வசூல். அதிகாலை 1 மணி, 4 மணி மற்றும் 8 மணிக்கு நடந்த சிறப்புக் காட்சி வசூல் இதில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் முதல் மூன்று நாட்களுக்கான வசூல் தொகை எவ்வளவு என்ற விவரம் நேற்று இரவு வெளியானது.

உலகம் முழுவதும் மூன்றே நாட்களில் இந்தப் படம் ரூ 100 கோடிக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துவிட்டது. இந்திப் பதிப்பும் வெளியாகியிருந்தால், இந்தத் தொகை மேலும் அதிகரித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மட்டும் ரூ 55 கோடியும், ஆந்திரம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பிற பகுதிகளில் ரூ 26 கோடியும், வெளிநாடுகளில் ரூ 21 கோடியும் வசூலாகியுள்ளது லிங்காவுக்கு. 

  14 Dec 2014
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்