Home  |  ஆன்மிகம்

பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

பிரதட்சண மந்திரம்


பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும்அல்லது சந்நிதிகளை சுற்றி வந்தாலும் இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும்.

யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!
தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!

"பல ஜென்மங்களில் செய்த பாவங்கள கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும்" என்பது இதன் பொருள்.

பிரதட்சணம் செய்யும் பொது நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும்.

 

அநேக‌மாக‌ எல்லாக் கோயில்க‌ளிலுமே ப‌க்த‌ர்க‌ள் அங்க‌ப் பிர‌த‌ட்ச‌ணம் செய்யும் வ‌ழ‌க்க‌ம் இருந்துவ‌ருகிற‌து.

கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்...

 

 

இத‌ற்கான‌ அடிப்ப‌டைக் கார‌ண‌ம் என்ன‌ தெரியுமா?

கால‌ம் கால‌மாக‌ எத்த‌னையோ ம‌கான்க‌ளும், ஞானிக‌ளும் அந்த‌க் கோயிலுக்கு வ‌ந்து வ‌ழிப‌ட்டு மோட்ச‌ம் அடைந்திருப்பார்க‌ள். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ப‌ல‌ ம‌கான்க‌ளின் திருப்பாத‌ங்க‌ள் ப‌ட்ட‌ அந்த‌ இட‌ங்க‌ளில் ந‌ம‌து த‌லை முத‌ல் கால்க‌ள் வ‌ரை ப‌டும்ப‌டியாக‌ ப‌டுத்து, அங்க‌ப் பிர‌தட்ச‌ணம் செய்யும்போது, அந்த‌ ஞானிக‌ளின் பாத‌த் துளியின் ம‌கிமையால் ந‌ம்முடைய‌ பாவ‌ங்க‌ள் எல்லாம் க‌ளைய‌ப்ப‌டுகின்ற‌ன‌. இதுதான் ஆல‌ய‌த்தினுள் அங்க‌ப் பிர‌தட்ச‌ணம் செய்ய‌ப்ப‌டுவ‌த‌ன் உட்பொருளாகும்

 

மூன்று முறை வலம் வந்தால் :- இஷ்ட சித்தி அடையலாம்.

ஐந்து முறை வலம் வந்தால் :- வெற்றிகள் கிட்டும்.

ஏழு முறை வலம் வந்தால் :- நல்ல குணங்கள் பெருகும்.

ஒன்பது முறை வலம் வந்தால் :- நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.

பதினோரு முறை முறை வலம் வந்தால் :- ஆயுள் பெருகும்.

பதின் மூன்று முறை முறை வலம் வந்தால் :- செல்வம் பெருகும்.

நூற்றியெட்டு முறை வலம் வந்தால் :- அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்.

  06 Jan 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!